Product on sale
சோடஷ மனைப் பொருத்தம் (ஆயாதி கணிதப் பொருத்தம்)
10 products sold in last 8 hours
Selling fast! Over 2 people have in their cart
சோடஷ மனைப்பொருத்தம் (ஆயாதிக் கணிதப் பொருத்தம்)
வாஸ்து சாம்ராட்
நவமணி சண்முகவேலு
23 people are viewing this right now
- Estimated Delivery : Up to 4 business days
- Free Shipping & Returns : On all orders over $200
புத்தகத்தின் பெயர்: சோடஷ மனைப் பொருத்தம் (ஆயாதி கணிதப் பொருத்தம்)
ஆசிரியர்: வாஸ்து சாம்ராட் நவமணி சண்முகவேலு

நவமணி சண்முகவேலு
இல்லறம் நல்லறம் ஆக வேண்டும். மணமக்கள் இனிதாக வாழ வேண்டும் - என்ற நோக்கில் பத்துப் பொருத்தங்கள் பார்த்து, இருவரின் ஜாதகங்களைக் கவனமாக ஆய்வு செய்கிறோம். `அதுபோல் கட்டுகிறக் கட்டடம், காலத்திற்கும் பெயர் சொல்ல வேண்டும்’ என்ற எண்ணத்தில், 16 - பொருத்தங்கள் மற்றும் வாஸ்து விதிகளைக் கவனமாகவே கணிக்கிறோம். ஆயாதி கணித (சோடஷ மனைப் பொருத்தம்) கலையை ஸ்ரீ விஸ்வகர்மா மற்றும் மயன் போன்ற மகரிஷிகள் வழிகாட்டினர். இவர்களுக்குப் பின் வந்த பல வாஸ்து ஆசான்கள், இக்கலையை மேலும் மெருகூட்டினர். 16- பொருத்தம் இதனை சோடஷ ஆயாதி – என்றும் பூர்ண ஆயாதி என்றும் கூறுவர். இது பற்றியப் பூர்ண விளக்கத்தை இந்நூலில் காணலாம். அரங்கம், ஆலயம், வணிக வளாகம், திருமண மண்டபம், தொழிற் சாலை - போன்ற அனைத்துக் கட்டடங்களுக்கும், ஆயாதி கணித வழியில் கட்டடம் கட்ட இந்நூல் உங்களுக்கு பெரிதும் உதவும். ஜோதிடம் வாஸ்துக் கலையில், 46-ஆண்டுகள் பயணிக்கிறேன். இக்கலையில் 5-வது தலைமுறையாக அனுபவம் பெற்று உள்ளேன் என்பதை பெருமையாக கருதும் நான், அடுத்த தலைமுறைக்கும் இந்த கலை சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், முயற்சியில் ஜோதிட வகுப்பு, வாஸ்து வகுப்பு நடத்தி வருகிறேன். என்னுடைய மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்நூல் அனைவருக்கும் பயன்படும் விதமாக எளிய கணித முறையில் தொகுத்து வெளியிடுகிறேன். தமிழ் கூறும் நல்லுலகுக்கு இந்நூல் சமர்ப்பணம்.
நூலைப் படிங்க.. பயன்பெறுங்கள்.
வாழ்க வளமுடன்
நவமணி சண்முகவேலு
ஹரன் விஜய் பதிப்பகம்
123 – அமைதிச் சோலை நகர்,
4 வது கிழக்கு வீதி, திருநகர், மதுரை – 625006
Reviews
There are no reviews yet.