அசத்தலான முதலீடுகள் அழகான வாழ்க்கை

ஆசிரியர் பெயர்: முனைவர்.க.பாலசந்தர் , முனைவர்.என்.பாலசந்தர்
பதிப்பகம்: தமிழ்ச்சுவடி
மொத்த பக்ககங்கள்: 168
பதிப்பு: 2021

  • Free Delivery

    Orders over 1000

  • Secure Payment

    100% Secure Payment

    170.00

    இந்த புத்தகம் இந்தியாவில் நிதிச்சேவை துறையில் ஏற்பட்டு வரும் புதிய விஷயங்களை மிக எளிமையாக விளக்கியுள்ளது. வீட்டின் பீரோவில் பணம் அனாவசியமாக தூங்கி கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் வேர்வை சிந்தி உழைத்த பணம் நமக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும். பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை, எல்லோரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படி சேமித்து அதனை எங்கு முதலீடு செய்யவேண்டும். அப்படி செய்வதன் மூலம் எவ்வாறு குடும்பத்தின் நிதித்தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதை சுலபமாக கொடுத்துள்ளோம்.
    வீட்டின் அலமாரி, மற்றும் பீரோவில் பணத்தை பாதுகாத்து வந்தோம். பின்பு பேங்கில் சேமித்தோம். தங்கம் வாங்கி சேமித்து வந்தோம். இதன்மூலம் கிடைக்கும் வருமானம், வரி மற்றும் பணவீக்கத்தை விட குறைவாக இருக்கிறது. இதனால் இந்தியர்களின் சேமிப்பு பணம் அதிகம் வளராமல் இருந்தது. நிதிச்சேவை, மற்றும் டிஜிட்டல் துறையில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன.
    இன்ஷூரன்ஸ் துறையில் பல புதிய திட்டங்கள் பாலிசி தாரரை வெகுவாக கவர்ந்துள்ளது. மியூச்சுவல் பஃண்ட் திட்டங்கள் கொடுக்கும் நல்ல பாதுகாப்பான, வருமானம், லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை தன்வசம் இழுத்து இருக்கிறது. ஷேர் சார்ந்த முதலீடு தற்சமயம் பல வசதிகளை ட்ரேடர்களுக்கு செய்து கொடுத்துள்ளது. எனவே கோடிக்கணக்கான இந்தியர்கள் இதில் முதலீடு செய்யத் துவங்கி உள்ளார்கள்.
    பென்ஷன் திட்டம், காகித தங்கம் போன்றவைகள் தற்போது முதலீட்டாளர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இது போன்ற தற்காலப் புதுமைகள் இப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், நடுத்தர வயதுடைய ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என எல்லோருக்கும் தேவைப்படும் நிதிச் சேவைகள் குறித்து எளிய தமிழில் கொடுத்திருக்கிறோம்