உரிமையியல் வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் (Court Procedures in a Civil Case: A Comprehensive Guide)
நூலாசிரியர்: வழக்கறிஞர் I. முருகேசன் M.A., M.L.
உரிமையியல் வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் என்பது உரிமையியல் (Civil) வழக்குகள் எவ்வாறு தொடங்கப்படுகின்றன, விசாரிக்கப்படுகின்றன, தீர்ப்பை அடைகின்றன மற்றும் தீர்ப்புக்குப் பிந்தைய நடைமுறைகள் எவ்வாறு அமைகின்றன என்பதை எளிய தமிழில் விளக்கும் முழுமையான சட்ட வழிகாட்டி.
1908-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உரிமையியல் நடைமுறைச் சட்டம் (Code of Civil Procedure – CPC) அடிப்படையில், வழக்கின் ஒவ்வொரு கட்டத்தையும் நடைமுறை ரீதியாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. சட்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறைத் தேர்வுகளுக்குத் தயாராகும்வர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ள குறிப்புநூலாக இது விளங்குகிறது.
சிக்கலான சட்டக் கருத்துக்களை எளிமையான தமிழில் விளக்கும் இந்த நூல், நீதிமன்ற நடைமுறைகளை நடைமுறை அனுபவத்துடன் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நம்பகமான கையேடாக இருக்கும்.
இந்த நூல் யாருக்கெல்லாம் பயனுள்ளது?
- சட்ட மாணவர்கள்: தேர்வுக் காலங்களில் மிகச் சிறந்த ஆதார நூலாகவும் (Reference Book) வழிகாட்டியாகவும் இதைப் பயன்படுத்தலாம்.
- இளம் வழக்கறிஞர்கள்: நீதிமன்ற அன்றாட நடைமுறைகளையும், சிவில் வழக்குகளின் படிநிலைகளையும் எளிதில் புரிந்துகொள்ள உதவும் ஒரு சிறந்த கையேடு.
- பொதுமக்கள்: தங்களது சட்டபூர்வமான உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெறவும், சமூக வழிகாட்டியாகவும் இந்நூலை வாசித்து பயன்பெறலாம்.










Be the first to review “உரிமையியல் வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் (Court Procedures in a Civil Case: A Comprehensive Guide)”