`இல்லறம் நல்லறம் ஆக வேண்டும், மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’ என்ற நோக்கில் பத்துப் பொருத்தங்கள் பார்த்து, இருவரின் ஜாதகங்களைக் கவனமாக ஆய்வு செய்கிறோம்.
`அதுபோல் கட்டுகிறக் கட்டடம், காலத்திற்கும் பெயர் சொல்ல வேண்டும்’ என்ற எண்ணத்தில், 16 – பொருத்தங்கள் மற்றும் வாஸ்து விதிகளைக் கவனமாகவே கணிக்கிறோம். அதற்கு ஆயாதி கணிதம் என்கிற சோடஷ மனைப் பொருத்தம் பெரிதும் உதவுகிறது.
ஆயாதி கணித (சோடஷ மனைப் பொருத்தம்) கலையை ஸ்ரீ விஸ்வகர்மா மற்றும் மயன் போன்ற மகரிஷிகள் வழிகாட்டினர். இவர்களுக்குப் பின் வந்த பல வாஸ்து ஆசான்கள், இக்கலையை மேலும் மெருகூட்டினர்.
16- பொருத்தம் இதனை சோடஷ ஆயாதி – என்றும் பூர்ண ஆயாதி என்றும் கூறுவர். இது பற்றியப் பூர்ண விளக்கத்தை இந்நூலில் காணலாம்.
அரங்கம், ஆலயம், வணிக வளாகம், திருமண மண்டபம், தொழிற் சாலை – போன்ற அனைத்துக் கட்டடங்களுக்கும், ஆயாதி கணித வழியில் கட்டடம் கட்ட இந்நூல் உங்களுக்கு பெரிதும் உதவும்.
ஜோதிடம் வாஸ்துக் கலையில், 46-ஆண்டுகள் அனுபவமிக்க புலவர் நவமணி சண்முகவேலு அவர்கள், வாஸ்து கலையை கற்க விரும்பும் அனைவருக்கும் பயன்படும் விதமாக எளிய கணித முறையில் இந்நூலை தொகுத்துள்ளார்.
வாஸ்து பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ள அனைவரும் இந்த புத்தகத்தை படித்து பயனடையலாம்.











Be the first to review “சோடஷ மனைப்பொருத்தம்”