காயத்ரி மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா ‘மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
ராஜரிஷி விஸ்வாமித்திரரால் வழங்கப்பட்ட காயத்ரி மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுகிறது.
காயத்ரி மந்திர தத்துவத்தையும் விளக்கத்தையும் அனைவரும் தெரிந்துக்கொள்ளவும் அதற்கான தியானத்தை மேற்கொள்ளவும் இந்த நூல் மூலம் விளக்கம் அளித்து அதை உணர்ந்து செயல்படத் தேவையான சில விதிகளையும் கூறி நமக்கு வழிகாட்டியுள்ளார் ஆசிரியர் ஈசநேசன் மகஸ்ரீ.
மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான இந்த மந்திரம் சக்தியைக் குறித்து வியந்து பாடப்பட்டது. ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தின் பாடலாக உள்ள இந்த மந்திரம் சாவித்ரி மந்திரம் என்றும் கூறப்படுகிறது.
அருள்தரும் காயத்ரி தேவியின் உபாசனைகள் தனித்து உள்ளது. இங்கு அளிக்கும் காயத்ரி மந்த்ரமானது சக்தியும் சிவனும் அடங்க்கிய மூலதத்துவத்தை அடைய செய்யக்கூடிய தவயோகமாகும்.










