நூலாசிரியர் திரு.I.முருகேசன் அவர்கள் எழுதிய “இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 2023” (பாரதிய நாகரிக் சுரஷா சன்ஹிதா-2023) என்ற இந்நூல் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அனைத்து சட்டப் பிரிவுகளையும் ஆழமாக ஆராய்ந்து, சட்ட நுணுக்கங்களை தெளிவாக எடுத்துரைக்கும் அரிய தமிழ்ப் பார்வையிலான நூலாகும்.
இந்நூலின் சிறப்பம்சங்கள்:
ஒவ்வொரு சட்டப்பிரிவிற்கும் நேர்த்தியான மொழிபெயர்ப்பு
வழக்கறிஞர்கள், காவல்துறையினர், சட்ட மாணவர்களுக்கு மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
இந்நூல் வழக்கறிஞர்கள், காவல் துறையினர், சட்ட விரிவுரையாளர்கள், சட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தில் தமிழ் ஆவர்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒரு துணை நிழலாக அமையும்.
Bharatiya Nagarik Suraksha Sanhita -2023 என்பது வெறும் சட்டமாற்றமல்ல, அது சிந்தனைக் கட்டமைப்பின் புரட்சியைக் குறிக்கிறது. பழைய இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் போன்று ஆங்கில ஒழுங்குகளால் ஆன சட்டங்களைத் தமிழில் வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. அந்த இடைவெளியை நிரப்பும் முக்கிய முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூலாசிரியர் தனது சொந்த முயற்சி, தெளிவான சட்டப் பின்னணியும் நுணுக்கமான வழக்குறைஞர் அனுபவமும் கொண்டு, சட்டம் என்பது வெறும் சட்ட நூல்கள் மட்டுமல்ல. நெறி, நீதிச்சிந்தனை, மனிதநேயம் ஆகியவற்றின் கலவை என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.
நூலாசிரியர் எழுதிய முந்தைய நூலான “சட்டப்பார்வையில் ஆவணங்கள்” மாண்புமிகு தமிழக முதல்வரிடமிருந்தும் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சகத்திடமிருந்தும் விருது பெற்றது. அந்த நூல் நீதியை களத்தில் எடுத்துக்காட்டியதோடு, தனிநபர் சிந்தனைகளை சட்டத்துடன் பொருத்த முயற்சி செய்த ஒரு சிந்தனைக் கருவியாக இருந்தது. அந்த நூலில் வெளிப்பட்ட அவரது பார்வை இந்நூலில் மேலும் விரிவு பெற்றுள்ளது.








