இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பே இன்ஷுரன்ஸ் சேவை வந்த போதிலும், இன்று வரை இந்தியர்கள் அனைவரையும் முழுமையாக சென்று அடையவில்லை.
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இன்ஷுரன்ஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தை ஆதாரமாக கொண்டு இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் புத்தம்புதிய பாலிசிகளை வித்தியாசமான மார்கெட்டிங் உத்திகளை கொண்டு அறிமுகம் செய்து வருகிறது.
ஐ.ஆர்.டி.ஏ (IRDA) எனும் இன்ஷுரன்ஸ் கட்டுபாட்டு மற்றும் ஒழுங்குமுறை அமைப்பு எடுக்கும் கொள்கைகளும் முடிவுகளும் பாலிசிதாரருக்கு நம்பிக்கை ஊட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இன்ஷுரன்ஸ் துறையும் வளர்வதற்கு உதவிபுரிகிறது.
“இன்ஷுரன்ஸ் இருக்க பயமேன்” என்கிற இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்ஷுரன்ஸ் பற்றிய அனைத்து கட்டுரைகளும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பொருத்தமான மைக்ரோ இன்ஷுரன்ஸ், டிஜிட்டல் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்திவரும் இன்றைய இளைஞர்களுக்கு என்று சைபர் இன்ஷுரன்ஸ் குறித்த கட்டுரைகள் பயனுள்ளது.
கோவிட் -19 போன்று உலக மக்களை அதிகமாக தாக்கிவரும் கேன்சர் நோய்கென்று பிரத்யேகமாக கேன்சர் இன்ஷுரன்ஸ் பாலிசி மற்றும் ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி பற்றிய கட்டுரைகள் இப்புத்தகத்தின் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெளிநாட்டில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களுக்கென்ற ஸ்டூடன்ஸ் ட்ராவல் பாலிசி குறித்த கட்டுரை மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும். “சிக்கலில்லாமல் இன்ஷுரன்ஸ் க்ளைம் பெறுவது எப்படி ” என்ற கட்டுரை, இன்ஷுரன்ஸ் பற்றிய அறிவை மேலும் விரிவடைய செய்யும். இப்படி நிறைய இன்ஷுரன்ஸ் சேவைகளை பற்றி விரிவாக இந்த புத்தகத்தில் படிக்கலாம்.




Be the first to review “இன்ஷுரன்ஸ் இருக்க பயமேன்”